தமிழ்நாடு

தாக்குதலுக்கு உள்ளான டிராபிக் ராமசாமி: புகாரை ஏற்க மறுத்ததாக போலீஸ் மீது குற்றச்சாட்டு

குமார்



மதுராந்தகம்: மேல்மருவத்தூரில் சாலைகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை அடுத்து, மேல்மருவத்தூர் கோயிலில் இருந்த பக்தர்களும், பாதுகாவலர்களும் டிராபிக் ராமசாமி மற்றும் அவரது காவலர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார்  அளித்தால், அதனை காவலர்கள் ஏற்கவில்லை என்று டிராபிக் ராமசாமி தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, நான் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி டிராபிக் ராமசாமி சென்னை திரும்பி விட்டார்.

இது குறித்து காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, டிராபிக் ராமசாமியின் புகாரே வரவில்லை. வந்தால்தானே ஏற்க முடியும் என்று  பதில் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT