தமிழ்நாடு

 தமிழகத்திற்கு ரூ.1000 கோடி வறட்சி நிவாரண நிதி: பிரதமர்  மோடியிடம் முதல்வர் பன்னீர்செல்வம் சார்பில் மனு!

DIN

புதுதில்லி: தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக  முதல்வர் பன்னீர்செல்வம் சார்பில் பிரதமர் அலுவலகத்தில் இன்று மனு வழங்கபட்டது.

பருவமழை பொய்த்தன் காரணமாக தமிழகம் கடுமையான வறட்சியில் தவிக்கிறது. விளைச்சல் இல்லாமல்

பயிர்கள் கருகியதைக் கண்டு மாநிலம்முழுவதும் பல்வேறு விவபாசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று, மாநிலம் முழுவதும் பார்வையிட்டது. அதன் அடிப்படையில் விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு முதல்வரிடம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக  முதல்வர் பன்னீர்செல்வம் சார்பில் பிரதமர் அலுவலகத்தில் இன்று மனு வழங்கபட்டது. இந்த மனுவை முதல்வர் பன்னீர்செல்வம் சார்பில் மாநில மீட்ப்புப்பணிகள்மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் பிரதமர் அலுவலகத்தில் வழங்கினார்.

இதே போன்றதொரு மனு மத்திய விவசாயத் துறை செயலரிடமும் வழங்கப்பட்டது.

தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1000 கோடியை வழங்க வேண்டும் என்று கோரியுள்ள அதே வேளையில் இந்த தொகையானது மத்திய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கபப்ட்ட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

இந்த் தகவல்கள் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT