தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு: தென்னிந்திய நடிகர் சங்கம் நாளை உண்ணாவிரதப் போராட்டம்

DIN

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, தென்னிந்திய நடிகர் சங்கம் வெள்ளிக்கிழமை (ஜன.20) உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள உள்ளது.

இதுகுறித்து அந்தச் சங்கம் சென்னையில் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி அடையாளம் இருக்கிறது. அதை கட்டிக் காப்பாற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. கடந்த 5,000 ஆண்டுகளாக தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாக ஏறுதழுவுதல் இருந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக ஏறுதழுவுதல் நடக்காமல் தமிழர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளனர். பொறுத்தது போதும் என்று இன்று இதற்கு நிரந்தர தீர்வுக்காண தமிழர்கள் பொங்கி எழுந்துள்ளனர். குறிப்பாக மண்ணின் மைந்தர்கள், மாணவர்கள், இளைஞர்கள் தங்களது இன உணர்வை வெளிப்படுத்த தமிழகமெங்கும் களமிறங்கி போராடி வருகிறார்கள்.

1965-இல் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு தமிழகம் கண்டுள்ள மிகப்பெரிய மாணவர்கள் போராட்டமாக ஜல்லிக்கட்டு மாறி உள்ளது. மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தரும் வகையில், தென்னிந்திய நடிகர் சங்கம் வெள்ளிக்கிழமை (ஜன.20) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை, நடிகர் சங்க வளாகத்தில் மெளன அறவழி போராட்டம் நடத்தப்படும்.

அடையாள வேலைநிறுத்தம் -ஃபெப்ஸி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரைத் தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த அமைப்பான ஃபெப்ஸி வியாழக்கிழமை (ஜன.19) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது. ஜல்லிக்கட்டை நடத்த அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அடையாள வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதனால், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் தொடர்பான எந்தப் பணிகளும் வியாழக்கிழமை நடைபெறாது என ஃபெப்ஸி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT