தமிழ்நாடு

கிராமத்துக்குள் புகுந்த கரடி

DIN

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் வனத்தில் இருந்து வெளியேறிய கரடி, அருகிலுள்ள தொண்டூர் கிராமத்தில் புகுந்ததால் கிராம மக்கள் பீதியடைந்தனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் வனத்தில் ஏராளமான கரடிகள் உள்ளன. இந்த கிராமத்தையொட்டி உள்ள தொண்டூர் கிராமத்தில், வாயில் காயமடைந்த நிலையில் நடக்க முடியாமல் தள்ளாடியபடி கரடி சென்றதைப் பார்த்த மக்கள், வனத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, ஊருக்குள் புகுந்த கரடியை வனத்துக்குள் துரத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அவர்கள் மயக்க மருந்து செலுத்தி கரடியைப் பிடித்தனர். கால்நடை மருத்துவர் கரடிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். பிறகு அந்தக் கரடி வனப் பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் 15 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்: முதல்வா் சித்தராமையா

திருச்சியில் 124 சுற்று வாக்கு எண்ணும் பணிக்கு 1,627 போ்!

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிா்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளரிடம் வழிப்பறி

‘வாசிக்கும் பழக்கம் வாழ்வையே மாற்றும்’

SCROLL FOR NEXT