தமிழ்நாடு

ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு: பட்டாசு உற்பத்தியாளர்கள் 4ஆவது நாளாக வேலைநிறுத்தம்

ஜிஎஸ்டி வரியை கண்டித்து பட்டாசு உற்பத்தியாளர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 4ஆவது நாளை எட்டியுள்ளது. 

தினமணி

ஜிஎஸ்டி வரியை கண்டித்து பட்டாசு உற்பத்தியாளர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 4ஆவது நாளை எட்டியுள்ளது. 

பட்டாசுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.  இதை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம், தி இந்தியன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்டவை  மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை முன்வைத்தன. எனினும் பட்டாசுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட வில்லை. 

இதையடுத்து பட்டாசு உற்பத்தியாளர்கள்,  ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வலியுறுத்தி ஜூன் 30 ஆம் தேதி முதல்  பட்டாசு ஆலைகளை மூடி காலவறையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறித்திருந்தனர். அதன் படி விருதுநகர் மாவட்டதத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளும், பட்டாசு கடைகளும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அவர்களின் போரட்டம் இன்று 4ஆவது நாளை எட்டியுள்ளது. 

பட்டாசு உற்பத்தியாளர்களின் போராட்டத்தால் பல லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதோடு,  பட்டாசு மூலப்பொருள்கள் விற்பனையாளர்கள்,  காகித அட்டைப்பெட்டி தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT