தமிழ்நாடு

அடுத்த 2 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

DIN

அடுத்த 2 நாள்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியது: வெப்பச் சலனத்தின் காரணமாக அடுத்த 2 நாள்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றனர்.
திருச்சியில் மட்டும் வெயில் சதம்: ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தமிழகத்தில் திருச்சியில் மட்டும் 100 டிகிரி வெயில் பதிவானது. மாநிலத்தின் பிற பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான வானிலை நிலவியது.
மழை: ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 20 மி.மீ., மழை பதிவானது. நீலகிரி மாவட்டம் ஜி பஜார், நடுவட்டம் மற்றும் திருச்செங்கோடு, வால்பாறை, சிதம்பரம் உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்):
திருச்சி 100
மதுரை 99
சென்னை (நுங்கம்பாக்கம்) 93

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

நெல்சன் தயாரிப்பில் முதல் படம் யாருடன்?

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

SCROLL FOR NEXT