தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 25.21அடி

DIN

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 25.21 அடியாக உயர்ந்தது.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக, அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.
இந் நிலையில், கடந்த இரு தினங்களாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்து வருகிறது.
திங்கள்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 2,589 கன அடியாகச் சரிந்தது.
அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 1,200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்கு குறைவான தண்ணீர் திறக்கப்படுவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 25.21 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 5.75 டி.எம்.சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT