தமிழ்நாடு

ஐஸ் கிரீம் நிறுவனத்திடம் ரூ.26 லட்சம் மோசடி குறித்து போலீஸில் புகார்

DIN

புதுச்சேரி:  புதுச்சேரி ஐஸ் கிரீம் நிறுவனத்திடம் ரூ. 26 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சென்னை நபர் மீது து போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி குபேர் சாலையில் தனியார் ஐஸ்கீரிம் தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இதன் மேலாளராக பிரதாப் (33). உள்ளார். இவரிடம் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த அஸ்வத்ராஜ் (28) என்பவர் ரூ. 36 லட்சம் மதிப்பில் ஐஸ் கிரீம் ஏஜென்சி எடுத்ததாக கூறப்படுகிறது.

இதற்கான தொகையில் ரூ. 10 லட்சத்தை மட்டும் அவர் செலுத்திய நிலையில் நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மீதமுள்ள ரூ. 26 லட்சத்தை அஸ்வத்ராஜ்  செலுத்தவில்லை. இந்நிலையில் பிரதாப் பணத்தைக் கேட்ட போது அதைத் தராமல் ஏஜென்சி தரப்பினர் மோசடி செய்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக பிரதாப் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர்கள் அதனை ஏற்காததால்  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின்பேரில் அஸ்வத்ராஜ் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் ஒதியஞ்சாலை போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீஸôர் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம்.. சர்ச்சையில் பாஜக!

சிரிப்பே துணை!

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

SCROLL FOR NEXT