தமிழ்நாடு

11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நாளை வெளியீடு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்! 

11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நாளை வெளியிடப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

DIN

கோபிச்செட்டிப்பாளையம்: 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நாளை வெளியிடப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் இன்று கோபிச்செட்டிப்பாளையம் வந்திருந்தார்.அப்பொழுது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நாளை வெளியிடப்பட உள்ளது. இது மாணவர்களிடையே நிலவும் தேவையற்ற அச்ச உணர்வினை போக்க உதவும்.

அத்துடன் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு 450 பயிற்ச்சி மையங்கள்  மூலம் சனிக்கிழமைகளில் பயிற்சி வழங்கப்படும்.

அத்ததுடன் ஆரம்ப கல்வி வகுப்புகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை அறிமுகம் செய்வது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம்.

இவ்வாறு செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

பவளப்பாறை பயன்கள் குறித்து மீனவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT