தமிழ்நாடு

பேரறிவாளனுக்கு பரோல் எப்போது?: அமைச்சர் பதில்

DIN

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க சட்டத்தில் இடமிருப்பதாக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு பரோல் வழங்க வேண்டுமென பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பான கோரிக்கை மனுவையும் அவர் அரசுக்கு அனுப்பியுள்ளார்.
இந்தப் பிரச்னை குறித்து சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய போது, பதிலளித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, பரோல் விவகாரம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில், பேரறிவாளனின் பரோல் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், பேரறிவாளனை பரோலில் விடுவதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. அது தொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன். விரைவில் அறிவிப்பு வரும். நளினி பரோல் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றார் அமைச்சர் சி.வி.சண்முகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT