தமிழ்நாடு

செல்போன் கோபுரத்தின் உச்சியில் ஏறி நின்று இளைஞர் தற்கொலை மிரட்டல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே விசாரணை என்ற பெயரில் போலீஸார் அடிக்கடி காவல்நிலையம் அழைத்துச் சென்று அடித்துத்

DIN

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே விசாரணை என்ற பெயரில் போலீஸார் அடிக்கடி காவல்நிலையம் அழைத்துச் சென்று அடித்துத் துன்புறுத்துவதாகக் கூறி, செல்போன் கோபுரத்தின் உச்சியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

குன்னூஜி ராஜம்பாளையத் தெருவை சேர்ந்தவர் வடிவேல். அவர் மீது அப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் விசாரணையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றிரவு மதுபோதையில் கடைவீதி பகுதிகளில் தகராறு செய்ததாக வடிவேலை காவல்நிலையம் அழைத்துச் சென்ற போலீஸார், காலையில் விடுவித்தனர்.

இதனிடையே போலீஸார் விசாரணை என்ற பெயரில் அடிக்கடி காவல்நிலையம் அழைத்துச் சென்று அடித்துத் துன்புறுத்துவதாகக் கூறி, வடிவேல் அப்பகுதியில் உள்ள செல்போன் போபுரத்தின் உச்சியின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், வடிவேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே கொண்டு வந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT