தமிழ்நாடு

கருணாநிதியிடம் ராகுல் நலம் விசாரிப்பு

DIN

திமுக தலைவர் கருணாநிதியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் துணைத் தலைவர் ராகுல்காந்தி நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

சென்னையிலுள்ள கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு ஞாயிற்றுக்கிழமை 12 மணியளவில் ராகுல் காந்தி வந்தார். அவரை மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
கருணாநிதியைச் சந்தித்த ராகுல் அவரது உடல் நலம் தொடர்பாக விசாரித்து அறிந்தார். இந்தச் சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் ராகுல் கூறியது: கருணாநிதி நலமுடன் உள்ளார். கடந்த முறை மருத்துவமனையில் சந்தித்ததைவிட தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. காங்கிஸ் தலைவர் சோனியா காந்தியின் வாழ்த்துகளையும் அவரிடம் தெரிவித்தேன். 100 சதவீதம் அவர் உடல்நலத்துடன் திரும்பி வரவேண்டும் என்பதுதான் எல்லோரின் விருப்பம் என்றார்.
பின்னர் காஷ்மீர், தில்லி உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு துறையின் அமைப்பினர் சோதனை நடத்துவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் கூறியது: காஷ்மீர் பிரச்னையை மத்திய அரசு தவறாகக் கையாள்கிறது. நாடு முழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பு பல்வேறு சோதனைகளை நடத்துகிறது. காஷ்மீரில் நடந்து கொள்ளும் விதம் சரியான அணுகுமுறை இல்லை.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் பேசி இருந்தேன். ஆனாலும் அவர்களது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஆனால் அவர்கள் எடுத்து வரும் முடிவுகள் தவறாக உள்ளன. காஷ்மீர் இந்தியாவின் வலிமைமிக்க மாநிலமாகும். அங்கு எடுக்கும் முடிவுகள் காஷ்மீருக்கு வலிமை சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்றார்.
புகைப்படங்களைப் பார்த்தார்: கருணாநிதியின் இல்லத்தில் பழைய புகைப்படங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. அதை ராகுல் காந்தி பார்த்து ரசித்தார். சில புகைப்படங்கள் தொடர்பாக அவர் கேட்டபோது, மு.க.ஸ்டாலின் விளக்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT