தமிழ்நாடு

அமெரிக்க பல்கலைக்கழகத்துடன் அமராவதி எஸ்.ஆர்.எம்.பல்கலை. ஒப்பந்தம்

DIN

ஆந்திர மாநிலம் அமராவதியில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்துடன்(எம்.ஐ.டி.) இணைந்து, பாடத்திட்டங்களை உருவாக்கியுள்ளது என்று பல்கலைக்கழகத் தலைவர் பி.சத்யநாராயணன் கூறினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கல்வியை அமராவதி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பெறும் கல்விச்சூழலை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்காக எம்.ஐ.டி. பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நுண்கணிதம், மின்காந்தத் தேற்றக்கொள்கை, கணினித் திட்டம் உள்ளிட்டவை கற்பிக்கப்பட உள்ளது.
இந்தியாவில் வேறெந்த பல்கலைக்கழகமும் மேற்கொள்ளாத பல புதிய தொழில்நுட்பப் பயிற்சிக் கல்வி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மரபுவழி தொழில்நுட்ப வழியிலான கல்வி முறைத் திட்டம், மாணவர்கள் தங்களது பாடங்களை எளிதில் புரிந்து பயிலவும்,புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வத்துடன் ஈடுபடும் திறனை மேம்படுத்திக் கொள்ளவும் பேருதவியாகத் திகழும் என்றார்.
இணை துணை வேந்தர் நாராயணராவ், மாணவர்களின் கல்வித்திறனுடன் ஆராய்ச்சித் திறமைகளையும் மேம்படுத்தும் தொழில்நுட்பக்கல்வி வழங்கும் நோக்குடன் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பல கல்வித்திட்டங்களை நிறைவேற்ற உள்ளோம்.
இணையம், வானவியல் தொழில்நுட்பம், புதுப்பிக்கும் ஆற்றல், நானோ தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஆழ்ந்த ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT