தமிழ்நாடு

ஜூன் 29 முதல் மாநிலம் தழுவிய பிரசார பேரியக்கம்

DIN

தமிழகத்தில் ஜூன் 29 முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை மாநிலம் தழுவிய அளவில் பிரசார பேரியக்கம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஆர்.முத்தரசன் தெரிவித்தார்.
திருச்சியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
மத்திய பாஜக ஆட்சியால் மதசார்ப்பற்ற கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இத்தகைய ஆபத்திலிருந்து இந்தியாவை தடுத்து நிறுத்தவும், தமிழக உரிமைகளை மீட்கவும் இந்தியாவை மீட்போம், தமிழகத்தை காப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து, ஜூன் 29இல் தொடங்கி ஜூலை 5 வரை ஒருவாரக் காலத்துக்கு மாநிலம் தழுவிய பிரசார பேரியக்கம் நடத்தப்பட உள்ளது.
ஜூலை 5 ஆம் தேதி மாலை திருச்சி தென்னூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலர் எஸ்.சுதாகர் ரெட்டி, தேசியச் செயலர் து.ராஜா, மூத்த தலைவர்கள் ஆர். நல்லகண்ணு, தா.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கையை எடுப்பது தேர்தல் ஆணையத்தின் வேலை. ஆனால், தேர்தல் ஆணையம், வருமானவரித் துறையும் மத்திய அரசின் விருப்பப்படியே செயல்படுகிறது.
தமிழக அரசை கலைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த அரசை கலைக்கத் தேவையில்லை. தானாகவே கலைந்துவிடும் என்றார் முத்தரசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT