தமிழ்நாடு

பாரதி உள்பட 3 புலவர்களுக்கு எட்டயபுரத்தில் தோரண வாயில்: அமைச்சர் என்.நடராஜன்

DIN

மகாகவி பாரதியார் உள்பட தமிழ்ப் புலவர்கள் மூன்று பேரைச் சிறப்பிக்கும் வகையில் அவர்கள் வாழ்ந்த ஊரான எட்டயபுரத்தில் தோரண வாயில் அமைக்கப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ. கு.உமாமகேஸ்வரி (அதிமுக) எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் நடராஜன் அளித்த பதில்:
பாரதியார், உமறுப்புலவர், முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் வாழ்ந்த ஊரான எட்டயபுரத்தில் தோரண வாயில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உறுப்பினர் எழுப்பியுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கருத்து கோரப்பட்டு திட்டமதிப்பீடு பெறப்படும். முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT