தமிழ்நாடு

ஜூலைக்குள் முழுமையாக மின்னணு குடும்ப அட்டைகள்: செல்லூர் கே.ராஜூ

DIN

ஜூலை மாதத்துக்குள் முழுமையாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது திமுக உறுப்பினர் பூங்கோதை எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில்:
தமிழகத்தில் கடந்த 2011-ஆண்டு முதல் 5 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 276 நியாய விலைக் கடைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன. மதுராந்தகம், ஆலங்குளம் உள்ளிட்ட சில தொகுதிகளில் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கடைகள் திறக்கப்படாமல் உள்ளதாக அந்தத் தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கான காரணங்கள் உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்படும். தமிழகம் முழுவதும் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் ஜூலைக்குள் முடிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

SCROLL FOR NEXT