தமிழ்நாடு

தொடர்ந்து இரவில் மின்வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்

DIN

கும்மிடிப்பூண்டியில் தொடர்ந்து இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான ஆரம்பாக்கம், மாதர்பாக்கம், பூவலை, தோக்கமூர், எகுமதுரை உள்ளிட்ட 50}க்கும் மேற்பட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக தினமும் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுகிறது. மறுநாள் காலை தான் மின்சாரம் மீண்டும் வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளைத் தொடர்பு கொண்டால் பதில் அளிப்பதில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் மின் தடை ஏற்பட்டது.
இரவு 10 மணிவரை மின்சாரம் வராததால் பொதுமக்கள் கும்மிடிப்பூண்டி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சென்னை} கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த கும்மிடிப்பூண்டி போலீஸார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்
பட்டது.
இதனால், அப்பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்
பட்டது.
கும்மிடிப்பூண்டியில் பல பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட மின் கம்பிகளே இதுவரை உள்ளன. பல பகுதிகளில் மின்கம்பிகளில் ஒட்டு போட்டு காணப்
படுகின்றன. மேலும், மின் கம்பங்களும் வலுவிழந்து காணப்
படுகின்றன.
எனவே, பழைய மின்கம்பிகளை மாற்றுவதோடு, ஆரம்பாக்கம் சுற்று வட்டார பகுதிக்காக ஏடூர் அல்லது ஆரம்பாக்கத்தில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT