தமிழ்நாடு

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஜூன் 30-இல் தொடக்கம்

DIN

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) தொடங்குவதையொட்டி விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக நடத்துவது குறித்து , மாநில அளவிலான குழு, நூற்றாண்டு விழா மலர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை (ஜூன் 28) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நூற்றாண்டு விழா சிறப்பு இலச்சினையை வெளியிட, மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை பெற்றுக் கொண்டார்.
மேலும், நூற்றாண்டு விழா விளம்பர குறுந்தகட்டை முதல்வர் வெளியிட, தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் பெற்றுக் கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடுவது குறித்தும், ஜூன் 30}ஆம் தேதியன்று மதுரையில் தொடக்க விழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநில அளவிலான விழாக் குழு உறுப்பினர்களான அமைச்சர் பெருமக்கள், அரசுத்துறை மற்றும் அலுவல் சாரா குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மாவட்டம் வாரியாக நடைபெறும் இந்த நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா 2018}ஜனவரி மாதம் சென்னையிலும் மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்படவுள்ளது.
வரும் 30}ஆம் தேதி மதுரை, பாண்டிகோயில், அம்மா திடலில் தொடக்கவிழா நிகழ்ச்சி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமை வகிக்கிறார். அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை சிறப்புரை ஆற்றுகிறார்.
எம்ஜிஆர் உருவப் படம்: அன்றைய தினம் (ஜூன் 30) நடைபெறும் நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆர். உருவப் படத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசுவார் என அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT