தமிழ்நாடு

செலவு குறைவான உலக நகரங்கள் வரிசையில் சென்னை!

உலக அளவில் செலவு குறைவான 10 நகரங்களின் பட்டியலில் சென்னை உள்ளிட்ட நான்கு இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.லண்டனைச் சேர்ந்த ’பிஸினஸ் எகானமிஸ்ட் இன்டலிஜன்ட் யூனிட்'

DIN

உலக அளவில் செலவு குறைவான 10 நகரங்களின் பட்டியலில் சென்னை உள்ளிட்ட நான்கு இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.
லண்டனைச் சேர்ந்த ’பிஸினஸ் எகானமிஸ்ட் இன்டலிஜன்ட் யூனிட்' (இஐயு) என்ற ஆய்வு அமைப்பு, உலக நகரங்களை தரவரிசைப்படுத்தி ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது.
அந்த அமைப்பின், இந்த ஆண்டுக்கான ’உலகின் மிகவும் செலவு குறைவான 10 நாகரங்களின்' வரிசையில் இந்தியாவின் 4 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலில் சென்னை 6-ஆவது இடத்தை வகிக்கிறது. பெங்களூரு 3-ஆவது இடத்தையும், மும்பை 7-ஆவது இடத்தையும் வகிக்கும் நிலையில், தில்லிக்கு 10-ஆவது இடம் கிடைத்துள்ளது.
கஜகஸ்தான் தலைநகர் அல்மாட்டி, உலகின் மிகவும் செலவு குறைவான நகரங்களில் முதலிடத்தையும், நைஜீரியாவின் லாகோஸ் நகரம் இரண்டாவது இடத்தையும் வகிக்கின்றன.
இஐயுவின் உலகில் வாழ்வதற்கு மிகவும் அதிக செலவு பிடிக்கும் நகரங்களின் பட்டியலில், தொடர்ந்து 4-ஆவது ஆண்டாக சிங்கப்பூர் முதலிடம் வகிக்கிறது. ஹாங்காங் இரண்டாவது இடத்திலும், ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரம் 3-ஆவது இடத்தையும் வகிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய மைல் கல்

சிலம்பம் மண்ணின் கலாசாரம்...

உறவு

மூலிகை மருத்துவம்...

தமிழர்களின் அடையாளம்!

SCROLL FOR NEXT