தமிழ்நாடு

சட்டப்படிதான் தேர்தலில் போட்டியிடுகிறேன்: டி.டி.வி.தினகரன் பேட்டி!

DIN

சென்னை: நான் சட்டப்படிதான் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று அதிமுகவின் துணை பொதுச் செயலாளாரான டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் வேட்பு மனு ஏற்று கொள்ளப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக அன்னிய செலாவணி மோசடி வழக்கு அவர் மீது இருப்பதால் அவரது மனுவை ஏற்றுக் கொள்ள கூடாது என்று திமுக வேட்பாளர் மருது கணேஷ் ஆட்சேபம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

மனு ஏற்றுக் கொள்ளபட்டதற்கு பிறகு டி.டி.வி தினகரன் அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

என் மீது போடப்பட்டுளள வழக்குள் எல்லாம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் காரணமாக போடப்பட்டவைதான். அவற்றிலிருந்து நான் மீண்டு வருவேன். தற்பொழுது சட்டப்படிதான் நான் தேர்தலில் நிற்கிறேன். எனக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக சொல்லப்படுவதெற்கெல்லாம் காலம் பதில் சொல்லும். 

முன்னதாக நான் பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பொழுதும் இப்படித்தான் திமுக  எதிர்த்து நின்றது. ஆனால் இறுதியில் நான்தான் வெற்றி பெற்றேன். தற்பொழுதும் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நான் வெற்றி பெற்ற பின்பு எனது வீடு அடையாறில் இருந்தாலும் ஆர்.கே நகர் தொகுதியில் வாரத்திற்கு மூன்று நாட்கள் தங்கி சேவை செய்வேன்.

இவ்வாறு தினகரன் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT