தமிழ்நாடு

தமிழகத்தில் வெப்பம் நீடிக்கும்

DIN

தமிழகத்தில் வறண்ட வானிலையின் காரணமாக சில தினங்களுக்கு வெப்பம் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குளிர்காலத்திலிருந்து கோடைக்காலத்துக்கான மாற்றம் நிகழ்வது மார்ச் மாதம் என்பதால், சில பகுதிகளில் வெப்பத்தின் தாக்கமும், சில பகுதிகளில் கோடை மழையும் பெய்து வந்தது. இந்நிலையில், ஏப்ரல் மாதம் கோடை காலம் தொடங்க உள்ளதால், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, வறண்ட வானிலை ஏற்படத் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
தமிழகத்தில் சில தினங்களுக்கு வெப்பம் நீடிக்கும். கோடை மழைக்கான வாய்ப்பு அடுத்த 4 தினங்களுக்கு இல்லை. இயல்பைவிட வெப்பம் அதிகரித்துள்ளது இந்த காலநிலைக்கு உரியதுதான். வழக்கத்துக்கு மாறாக வெப்பம் அதிகரிக்கவில்லை என்றனர் அவர்கள்.
2 இடங்களில் சதம்: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, 2 இடங்களில் 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்): வேலூர், சேலம் - 100, தருமபுரி, கரூர் பரமத்தி, பாளையங்கோட்டை - 99, திருச்சி - 98, மதுரை - 97, சென்னை - 93.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT