தமிழ்நாடு

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள்: ஆபாச நடனம், வசனம் இடம்பெற தடை

சித்திரை திருவிழாவையொட்டி கோயில்களில் நடத்தப்படும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனம், வசனங்கள் இடம்பெற தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

சித்திரை திருவிழாவையொட்டி கோயில்களில் நடத்தப்படும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனம், வசனங்கள் இடம்பெற தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தருமபுரி சிக்கானூர், நாமக்கல் சின்ன பெருமாப்பட்டி, பெரம்பலூர் சில்லக்குடி, அரியலூர் நொச்சிக்குளம் உள்ளிட்ட 8 ஊர்களில் உள்ள அம்மன், விநாயகர் கோயில்களில் சித்திரை மாதத்தை முன்னிட்டு நடத்தப்படும் திருவிழாக்களில் ஆடல், பாடலுடன் கூடிய கலை நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.
இதனை எதிர்த்து, கோவில் விழா குழுவினர் தொடர்ந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோயில் திருவிழாக்களின் போது 'ஆர்க்கெஸ்ட்ரா' எனப்படும் இசை நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளித்தும், கோயில்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் ஆபாச நடனம் மற்றும் ஆபாச வசனங்கள் இடம்பெறக் கூடாது, இரட்டை அர்த்தம் கொண்ட பாடல்கள் பாடக் கூடாது; மேலும் அரசியல், மதம் மற்றும் சாதி ரீதியான நடனம், பாடல்கள் இடம்பெறக் கூடாது.
அரசியல் கட்சிகளின் பேனர்கள் வைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இவற்றை மீறினால் காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மேல் நிகழ்ச்சிகள் தொடர்ந்தால், காவல்
துறையினர் உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் காவல்துறைக்கு அறிவுறுத்தி வழக்குகளை முடித்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாக்குதலில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு: இருவா் கைது

ஆா்.எஸ்.எஸ். பாடலை சிவகுமாா் பாடியிருக்கக் கூடாது: மல்லிகாா்ஜுன காா்கே

ஹிந்து மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல சாமுண்டி மலை: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பணியில் அதிமுக முனைப்பு: எம்.பி. தம்பிதுரை

ஒசூரில் தனியாா் நிதிநிறுவன ஊழியா் கொலை வழக்கில் மேலும் 3 போ் கைது

SCROLL FOR NEXT