தமிழ்நாடு

ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்பு: மே 30ல் அனைத்து ஓட்டல்கள் வேலைநிறுத்தம்

DIN

சென்னை: வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் மே 30 ஆம் தேதி அனைத்து ஓட்டல்களும் மூடப்படும் என்று உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மே 30 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்கள் ஒருநாள் வேலைநிறுத்தம். ஜிஎஸ்டி வரி விதிப்பில் 5 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை உணவகங்களுக்கு உத்தேச வரிவிதிப்பதால், உணவுகள் விலை உயரும். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

வரிவிதிப்பு குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். மக்கள் நலன்கருதி வரியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜிஎஸ்டி வரி பன்படங்கு உயர்த்தப்பட்டதை கண்டித்து இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT