தமிழ்நாடு

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

DIN

தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், வியாழக்கிழமை 8 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவானது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 108 டிகிரி வெயில் பதிவானது.
மழைப் பொழிவு: வியாழக்கிழமை காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் உதகையில் 20 மி.மீ., கொடைக்கானலில் 12 மி.மீ. மழையும் பெய்துள்ளது. இதுதவிர கோவை, தருமபுரி, பாளையங்கோட்டை, திருப்பத்தூர், வால்பாறை, வேலூர் உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியது: தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றனர்.
வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவானது.

வெயில் நிலவரம் (பாஃரன்ஹீட்டில்)

திருத்தணி 108
வேலூர் 106
கடலூர், கரூர் பரமத்தி 103
நாகை, பரங்கிப்பேட்டை,
திருச்சி 102
பாளையங்கோட்டை 101
மதுரை 100
சென்னை (மீனம்பாக்கம்) 99
புதுவையில்... வியாழக்கிழமை நிலவரப்படி, புதுச்சேரியில் 101 டிகிரியும், காரைக்காலில் 100 டிகிரி வெப்பநிலையும் பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

ஆவேஷம் திரைப்படம் பார்த்து அழுதேன்: இயக்குநர் ஜியோ பேபி

ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT