தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல் அவமதிப்பு வழக்கு: மாநிலத் தேர்தல் ஆணையர் மீண்டும் ஆஜராக உத்தரவு

தினமணி

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றாத மாநில தேர்தல் ஆணையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மாநில தேர்தல் ஆணையர், செயலாளர் மீண்டும் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
 தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், செப்டம்பர் 18-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தேர்தல் அட்டவணையை வெளியிட்டு, நவம்பர் 17-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு, இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என தெரிவித்திருந்தனர்.
 உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் முறையாகப் பின்பற்றவில்லை என்று கூறி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையர், செயலாளர் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். ஆனால், தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன் இருவரும் நவம்பர் 10 (வெள்ளிக்கிழமை) ஆஜராகுமாறு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் என்.சேஷசாயி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. அதன் பேரில் மாநிலத் தேர்தல் ஆணையர் மாலிக் பெஃரோஸ் கான், தேர்தல் ஆணையத்தின் செயலாளர் ராஜசேகர் ஆகியோர் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகினர், ஆனால் வழக்கு விசாரணைக்கு வரவில்லை.
 நவம்பர் 14-இல் ஆஜராக உத்தரவு: திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர், நீதிமன்றம் விதித்த கெடுவை மதிக்காமலும், உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்காமலும் தேர்தல் ஆணையம் தாமதம் செய்து வருகிறது என முறையிட்டார். அப்போது நீதிபதிகள், தேர்தல் ஆணையர் மற்றும் செயலாளரின் வருகையைப் பதிவு செய்து கொண்டு, இந்த வழக்கு வரும் நவம்பர் 14-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அன்றைய தினம் இருவரும் மீண்டும் ஆஜராக உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT