தமிழ்நாடு

துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை: கடலோரக் காவல்படை விளக்கம்

DIN

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என இந்தியக் கடலோரக் காவல்படை விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து கடலோரக் காவல் படை சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வங்கக் கடலில் சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோரக் காவல்படை கப்பல் வழக்கமான ரோந்துப் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தது. அப்போது 'ஜெஹோவா ஜிரே' என்ற மீன்பிடி படகில் இருந்த தமிழக மீனவர்கள், தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இதையறிந்து, மீனவர்களிடம் விசாரணை நடத்த கடலோரக் காவல்படை அதிகாரிகள் முற்பட்டபோது, வலைகளை விட்டுவிட்டு படகில் மீனவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை விரட்டிப் பிடித்த அதிகாரிகள், படகை நிறுத்தாமல் தப்பியோட முயன்றது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். பாதுகாப்புக் காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் மீனவர்கள் எவரும் துப்பாக்கியால் சுடப்படவில்லை.
அதுமட்டுமின்றி, இந்திய கடலோர காவல்படை கப்பல்களில் ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தப்படுவதும் கிடையாது. 
எனவே, மீனவர்கள் கூறுவதுபோல எந்தவித தாக்குதலையோ அல்லது காயங்களையோ கடலோர காவல்படையினர் ஏற்படுத்தவில்லை. அவர்கள் இரட்டைமடி வலையைப் பயன்படுத்தி அதிகாரிகளிடம் சிக்கிய விவகாரத்தைத் திசைத் திருப்பவே இதுபோன்ற புகாரைக் கூறுகின்றனர் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

SCROLL FOR NEXT