தமிழ்நாடு

46 ஆண்டுகளுக்குப் பிறகு.. திமுக தலைவர் கருணாநிதியின் மூக்குக் கண்ணாடி மாற்றம்

DIN


சென்னை: உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து வரும் திமுக தலைவர் கருணாநிதியின் மூக்குக் கண்ணாடி புதிதாக மாற்றப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி அணிந்திருந்த கருப்புக் கண்ணாடி மிக தடிமனாக இருப்பதால், அது அவரது மூக்குப் பகுதியை அழுத்தி அதனால் அவருக்கு பிரச்னை ஏற்படுவதை மருத்துவர்கள் சமீபத்தில் கண்டறிந்தனர்.

அதனால், அவரது கண் பார்வைக்கு ஏற்ற வகையில் புதிய லேசான மூக்குக் கண்ணாடி திமுக தலைவர் கருணாநிதிக்கு வழங்கப்பட்டு, அதனை அவர் அணிந்துள்ளார்.

46 ஆண்டுகளுக்கு முன்பு நேரிட்ட விபத்து ஒன்றில் இடது கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 1971ம் ஆண்டு அமெரிக்கா சென்று கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் கருணாநிதி. அப்போதிலிருந்து கறுப்பு நிற தடிமனான கண்ணாடியையே கருணாநிதி பயன்படுத்தி வந்தார்.

காந்தி தாத்தாவின் கண்ணாடியைப் போலவே, திமுக தலைவர் கருணாநிதிக்கும் கறுப்புக் கண்ணாடி ஒரு அடையாளமாகவே மாறியிருந்தது. இந்த நிலையில், சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வகை கண்ணாடியை கருணாநிதி அணிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

SCROLL FOR NEXT