தமிழ்நாடு

சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது ஏன்? வருமான வரித்துறை விளக்கம்

DIN


சென்னை: வரி ஏய்ப்பு குறித்து பொருளாதார உளவுத்துறை மூலம் கண்காணித்த பின்னரே சசிகலா குடும்பத்தினரின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டதாக வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.


அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலர் சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் என தமிழகம் உட்பட 187 இடங்களில் நவம்பர் 9ம் தேதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பல இடங்களில் 5 நாட்களுக்கும் மேலாக சோதனை தொடர்ந்தது.

சோதனை குறித்து பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் வெளியானது. 

இந்த நிலையில், சோதனை நடத்தப்பட்டது குறித்து வருமான வரித்துறையினர் இன்று விளக்கம் அளித்துள்ளனர்.

அதில், வரி ஏய்ப்பு குறித்து பொருளாதார உளவுத்துறை மூலம் கண்காணித்த பின்னரே சசிகலா குடும்பத்தினரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. 

சோதனையில் 70க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சசிகலாவின் குடும்பத்தினர் வீடுகள் மற்றும் போயஸ் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் 15 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போயஸ் இல்லத்தில் கைப்பற்றப்பட்ட பென்-டிரைவ் மற்றும் லேப்டாப்களில் சோதனை நடந்து வருகிறது. தேவையெனில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, மற்றும் இளவரசியிடம் விசாரணை நடத்தப்படும்.

போயஸ் தோட்ட இல்லத்தில் 5 அறைகளின் சாவிகளும் இளவரசியின் மகள் ஷகிலாவின் கணவர் ராஜராஜனிடம் இருந்து பெறப்பட்டன.

போயஸ் தோட்ட இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தப்படவில்லை. சசிகலாவின் 4 அறைகள் மற்றும் நேரடி உதவியாளர் பூங்குன்றனின்  அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT