தமிழ்நாடு

டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி மாதத்தில் புதுவையில் சரக்கு போக்குவரத்து தொடக்கம்: முதல்வர் நாராயணசாமி தகவல்  

தினமணி

வரும் ஜனவரி மாதம் சென்னை துறைமுகம்-புதுச்சேரி இடையே சரக்குப் போக்குவரத்து தொடங்கும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:சென்னைக்கு வந்த மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் நிதின்கட்கரி புதுவைக்கு சரக்குப் போக்குவரத்து விரைவில் தொடங்கும். அதற்கான ஆயத்த வேலைகள் முடிந்துள்ளன. சென்னை துறைமுகம் முழுமையான ஒத்துழைப்பு தரும் எனத் தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகமும், புதுவை அரசும் செய்துள்ள ஒப்பந்தம் மூலம் முதல் ஆண்டில் 4 லட்சம் டன் சரக்குகள் கண்டெய்னர் மூலம் கொண்டு வரப்படும். 

முகத்துவாரம் தூர்வாரும் பணியை முதல் ஆண்டில் புதுவை அரசும், அதன்பின்னர் இரண்டாம் ஆண்டில் இருந்து அப்பணியை சென்னை துறைமுகமே மேற்கொண்டு அதற்கான முழு தொகையும் ஏற்கும். புதுவை முகத்துவாரத்தை தூர்வாரும் பணி 90 சதவீதம் முடிந்துள்ளது.

முழுவதும் பணிகள் முடிந்த பின் டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஜனவரி தொடக்கத்தில் சரக்கு கையாளும் பணி தொடங்கும். சென்னையில் இருந்து கொச்சின் வரை புதுவை, காரைக்கால் வழியாக சொகுசு கப்பல் விட மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் தேவை

புதுவை சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு மற்றும் நீதிமன் கட்டணம் திருத்தம் குறித்த 2 சட்ட வரையறை நிறைவேற்ப்பட்டது. இந்த சட்டவரையறை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மாநிலத்தை பொறுத்தவரை மக்கள் நல திட்டங்கள் நிறைவேற் அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிது.

இலவச அரிசி, முதியோர், விதவை நிதியுதவி, வேட்டி, சேலை, சர்க்கரை, சென்டாக் நிதி காலத்தோடு தருவது என திட்டங்களை நிறைவேற் எண்ணுகையில் பல்வேறு கேள்விகளை எழுப்பி ஆளுநர் விளக்கம் கேட்கிறார். 

திட்டங்கள் நிறைவேற் உள்ள தடை பற்றி மக்களுக்கு தெரியும். இலவச அரிசி திட்டத்தை பொறுத்தவரை 7 பகுதியாக பிரித்து டெண்டர் விடப்பட்டது. முந்தைய ரங்கசாமி ஆட்சியில் எந்த திட்டமும் காலத்தோடு செய்யவில்லை. மத்திய நிதி பெ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கூட்டுவு துறை, பொதுத்துறை நிறுவனங்களில் அவர் தொகுதியை சேர்ந்தவர்கள் அதிகளவில் முறைகேடாக வேலைக்கு வைக்கப்பட்டனர்.

இதனால் கூட்டுவு, பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டமடைந்தன.ரூ.576 கோடி மானியம் கூட்டுவு, பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாங்கள் ஒதுக்கியுள்ளோம். அப்படியிருந்தும் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குகிது. இதற்கு கடந்த ஆட்சியில் எந்த முன்யோசனையும் இன்றி ஆட்களை திணித்ததுதான் காரணம்.

எங்கள் அரசு லாபத்தில் இயங்கும் நிறுவனத்தை வலுப்படுத்தவும், நஷ்ட நிறுவனங்களை பாதிப்பு இல்லாமல் மேம்படுத்த முன்னாள் தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT