தமிழ்நாடு

அதிமுக ஆட்சியைக் கலைக்க திமுக எம்எல்ஏக்கள் விரும்பவில்லை: அமைச்சர் பேச்சு

DIN

அதிமுக ஆட்சியைக் கலைக்க திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு விருப்பம் இல்லை என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம், தே.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி, பேரையூர் ஒன்றியங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திரளி, வடக்கம்பட்டி, பேரையூர் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயகுமார் பேசியது:
எனது வாழ்நாளுக்குப் பிறகு அதிமுக 100 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார்.
அதை நிறைவேற்றுவது ஒவ்வொரு தொண்டனின் கடமை. இப்போது கட்சிக்கும், ஆட்சிக்கும் இடையூறு செய்ய பல்வேறு குறுக்கு வழிகளைக் கையாண்டு வருகின்றனர். 
தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக கட்சியைக் கூறுபோட நினைக்கின்றனர். அவர்களது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள். அதிமுக ஆட்சி இருக்கக் கூடாது எனக் கூறி வருகிறார். ஆனால், திமுகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலர் அதை விரும்பவில்லை என்றார்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.தமிழரசன், நிர்வாகிகள் ஐயப்பன், திருப்பதி, அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT