தமிழ்நாடு

டெங்கு: கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை தேவை

DIN

டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை தேவை என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: 
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90 -ஆக அதிகரித்துள்ளது.
நிலைமை கை மீறிப் போய்விட்ட நிலையில்தான், தமிழக ஆட்சியாளர்கள் சென்னையில் நிலவேம்பு கசாயம் கொடுக்கும் திட்டத்தையும், கொசு ஒழிப்புக்காக ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யும் திட்டத்தையும் தொடங்கியுள்ளனர்.
இந்திய பொது சுகாதார சங்கம், தமிழகத்தில் 12,500 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கண்டறிந்துள்ளது. மருத்துவ அவசர நிலையை நடைமுறைப்படுத்துவதன் மூலம்தான் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியும் என்று அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
எனவே, மருத்துவ வல்லுநர்களின் பரிந்துரைப்படி அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT