தமிழ்நாடு

உரிமைக் குழு நோட்டீஸ் விவகாரம்: திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க தடை நீட்டிப்பு

DIN

மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருள்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இதனை ரத்து செய்யக் கோரி 21 திமுக எம்.எல்.ஏக்களும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், "குட்கா விவகாரத்தைக் காரணம்காட்டி தங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதன் மூலம் இந்த அரசு குறுக்கு வழியில் பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபித்துவிடலாம் என்ற எண்ணத்தில் சட்டப்பேரவை உரிமைக் குழு இந்த நோட்டீûஸ தங்களுக்கு அனுப்பியுள்ளது. எனவே இந்த நோட்டீûஸ ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை, நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டப்பேரவைச் செயலாளர் சார்பில் அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் ஆஜராகி, "பதில் மனு தயாராக உள்ளது; அதனை மனுதாரர்களுக்கு வழங்கிவிடுகிறோம். எனவே, இந்த வழக்கின் விசாரணையை மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்' என்றார். 
இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை வரும் 27 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT