தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை கிலோ ரூ.25 ஆக உயர்வு!

DIN

சென்னை: தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலை கிலோ ரூ.25 ஆக உயர்கிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலை கிலோ ரூ.25 ஆக உயர்கிறது.

இந்த விலை உயர்வானது நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அதே சமயம் அந்தி யோதனா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கபப்டும் சர்க்கரையின் விலை கிலோவுக்கு ரூ.13.50 என நீடிக்கும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்பொழுது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலை கிலோ ரூ.13.50 என்ற அளவில் உள்ளது. இந்த இரு மடங்கு விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் எனலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT