தமிழ்நாடு

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தில் ஏறி மாணவர்கள் போராட்டம்

DIN


விருதுநகர்: நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தில் ஏறி நின்று மாணவர்கள் சிலர் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

நீட் தேர்வு முறையால் தனது மருத்துவ படிப்பு கனவு தகர்ந்ததை அடுத்து  அரியலூர் மாணவி அனிதா கடந்த 1-ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும், நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க கோரி தமிழக முழுவதும் மாணவர்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

இந்நிலையில், இன்று காலை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் கோபுரத்தின் முன்பகுதியில் சில மாணவர்கள் ஏறி நின்று போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், மாணவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சில போலீஸார் கோபுரத்தின் மேல் ஏற முயற்சி செய்தபோது, மாணவர்கள் நீங்கள் மேலே ஏறினால் நாங்கள் கீழே குதித்துவிடுவோம் என்று மாணவர்கள் கூறியதால் அவர்கள் மேலே ஏறவில்லை. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் 828 வாக்குகள் முன்னிலை: ஆட்சியை இழக்கும் பிஜு ஜனதா தளம்!

இந்தூர் தொகுதியில் 1.9 லட்சம் வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் நோட்டா!

வடகிழக்கு மாநிலங்களில் நிலவரம் என்ன?

திமுகவுக்கு 38... விருதுநகரில் இழுபறி; தருமபுரியில் பாமக முன்னிலை!

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் முதன்முதலாக 10% வாக்கு பெற்ற பாஜக

SCROLL FOR NEXT