தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு: தினகரன் ஆதரவு எம்எல்ஏவுக்கு அபராதம்

DIN


சென்னை: அதிமுக அம்மா அணி மற்றும் புரட்சித் தலைவி அம்மா அணியினரின் பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரி மனு தாக்கல் செய்த  டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேலுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக அம்மா அணி மற்றும் புரட்சித் தலைவி அம்மா அணியின் பொதுக் குழு மற்றும் செயற்குழு நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் தொடர்ந்த மனுவில், அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட எடப்பாடி அணிக்கு உரிமையில்லை என்று கூறியிருந்தார்.

மனுவை இன்று விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, அதிமுக பொதுக் குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்ததோடு, வழக்குத் தொடர்ந்த எம்எல்ஏ வெற்றிவேலுக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். அதாவது, நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக, இந்த அபராதத்தை விதித்ததாக நீதிபதி தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுகியதற்கு பதில் தேர்தல் ஆணையத்தை அணுகி இருக்கலாமே என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT