தமிழ்நாடு

சிறுமி ஹாசினி வழக்கில் மேல் நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

DIN


சென்னை: சிறுமி ஹாசினி வழக்கில் அரசு தரப்பில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் உறுதி அளித்துள்ளார்.

சென்னை சாந்தோமில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், ஹாசினியை பலாத்காரம் செய்து கொன்ற தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு, அவர் விடுதலை செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், ஹாசினி வழக்கில் குற்றவாளி தப்பிக்கவே முடியாது. ஹாசினி வழக்கில் தமிழக அரசு மேல் நடவடிக்கை எடுக்கும்.  இதுபோன்ற சம்பவங்களுக்கு பாடமாக அமையும் வகையில் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவேர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமுருகன் காந்தி போன்றோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், குடியிருப்பில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து, அவளை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT