தமிழ்நாடு

அனல் மின் நிலைய வாயு மூலம் உரம் தயாரிக்க முயற்சி 

DIN

அனல் மின் நிலையங்கள் வெளியேற்றும் கரியமில வாயு மூலம் உரம் தயாரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் சரத்குமார் ஆச்சார்யா கூறினார். 
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் இந்தியப் பொறியாளர் கழகம், நெய்வேலி பொறியாளர், அறிவியலாளர் கழகம் சார்பில் 50-ஆவது பொறியாளர் தினவிழா, வட்டம் 17-இல் உள்ள பொறியாளர் கழக கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் சரத்குமார் ஆச்சார்யா, "வளர்ந்து வரும் இந்திய நாட்டில் பொறியாளர்களின் பங்கு' என்றத் தலைப்பில் பேசியதாவது: 
இன்றைய வர்த்தகச் சூழலில், மிகவும் குறைந்த செலவில் சுற்றுச் சூழலைப் பாதிக்காத வகையில் மின் சக்தியை உற்பத்தி செய்ய வேண்டிய சவால் பொறியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. நமது நாடு ஒட்டுமொத்த வளர்ச்சி பெற அனைவரும் மின்சக்தி பெற வேண்டும். என்எல்சி பொறியாளர்கள் சர்வதேச தரத்துக்கு இணையாக திறன் பெற்றவர்கள் என்பதால், இந்தப் பிரச்னைகளுக்கு அவர்களால் எளிதில் தீர்வுகாண முடியும்.
அனல் மின் நிலையங்கள் வெளியேற்றும் கரியமில வாயுவை சேகரித்து அதில் பெற்ற கரியினை அமோனியா, உரம் தயாரித்தல் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு நிலத்தில் உள்ள இயற்கை எரிவாயுவை எடுக்கும் பணியில் உபயோகிக்க வழங்குதல் போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் ஆச்சார்யா. 
விழாவுக்கு, என்எல்சி திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநர் பி.செல்வக்குமார் தலைமை வகித்தார். இந்திய பொறியாளர் கழகத்தின் நெய்வேலி மைய கெüரவச் செயலர் பி.செல்வன் வரவேற்றார். நிகழ்வில், என்எல்சி நிறுவனப் பொறியாளர்கள், விஞ்ஞானிகள், பொறியியல் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, விநாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. 
முன்னதாக டாக்டர் விஸ்வேஸ்வரய்யாவின் உருவச் சிலைக்கு என்எல்சி இந்தியா தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அறிவியலாளர் கழகத் தலைவர் டி.டி.நடராஜ் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT