தமிழ்நாடு

தரைமட்டப் பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்: போக்குவரத்து துண்டிப்பு

DIN

ஆசனூர் மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் அரேப்பாளையம் தரைமட்டப் பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளநீர் சென்றது. இதனால், ஆசனூர் - கேர்மாளம் இடையே 3 மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூரில் பெய்த பலத்த மழையால் அங்குள்ள வன ஓடை, பள்ளங்கள், தரைப்பாலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில நாள்களாக ஆசனூர், அரேப்பாளையம், ஓங்கல்வாடி, திம்பம் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் வனக் குட்டைகள் வேகமாக நிரம்பின. ஓங்கல்வாடி கிராமத்தையொட்டி உள்ள குட்டையில் மழை வெள்ளம் நிரம்பியது. 
மேலும், இந்த வனக் குட்டை நிரம்பி கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்தது. தவிர, ஓங்கல்வாடி மலைப் பகுதியில் பெய்த மழையால் அரேப்பாளையம் பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளநீர் மரம், செடி கொடிகளை அடித்துக் கொண்டு அரேப்பாளையம் தரைமட்டப் பாலத்தை மூழ்கடித்தபடி சென்றது.
இதனால், ஆசனூரில் இருந்து அரேப்பாளையம், கொள்ளேகால், கேர்மாளம் ஆகிய இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பேருந்துகள், காய்கறி வாகனங்கள் உள்ளிட்டவை வெள்ளநீர் வடியும் வரை 3 மணி நேரம் காத்திருந்தனர். வெள்ளநீர் குறைந்ததால் மீண்டும் வாகனங்கள் அவ்வழியாக இயக்கப்பட்டன. காட்டாற்று வெள்ளத்தின்போது வாகனங்கள் செல்ல வேண்டாம் என வனத் துறை, காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் - யுஜிசி வெளியீடு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

SCROLL FOR NEXT