தமிழ்நாடு

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது

DIN


சென்னை: தமிழக அரசியலில் பரபரப்பான சூழலில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.

அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது குறித்தும், அடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.

இனி, ஆளுநருடன் சந்திப்புக் கிடையாது என்று மு.க. ஸ்டாலின் கூறிவிட்ட நிலையில், இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் இதுவரை 80 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றுள்ளனர்.

திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வஉசி மைதானத்தில் மே 2 ஆவது வாரத்தில் பொருள்காட்சி: ஆட்சியா் தகவல்

வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் இன்றுமுதல் தொடா் காத்திருப்புப் போராட்டம்

அவிநாசியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ரூ.44,900 சம்பளத்தில் புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை!

நிறுத்தப்பட்ட சாலைப் பணியை தொடங்கக் கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT