தமிழ்நாடு

மாணவர்கள் கடினமாக முயற்சித்து இலக்கை அடைய வேண்டும்: அமைச்சர் கே.பாண்டியராஜன்

DIN

மாணவர்கள் கடினமாக முயற்சித்து, தங்களது இலக்கை அடைய வேண்டும் என தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.
திருவள்ளூரை அடுத்த கசுவா கிராமத்தில் உள்ள சேவாலயா சேவை மையத்தின் 29-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆண்டறிக்கையை வெளியிட்டு அவர் பேசியதாவது:
மாணவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் என்னவாக வேண்டும் என கனவு காண்கிறார்கள். நினைத்ததை அடைய முடியாதோ என்ற பயம் கூடாது. கடினமாக முயற்சித்து இலக்கை அடைய வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் வளர, வளர புதிதாக கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. வேகமான மாற்றம் கண்டு வரும் உலகில், புதுப் புது வாய்ப்புகளும் உருவாகிக் கொண்டே வருகிறது. அதனால், இளைஞர்கள் தங்கள் திறமைக்கேற்ற துறையில் ஈடுபட்டு, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வது அவசியம் என்றார்.
இதைத் தொடர்ந்து சேவாலயாவின் மகாகவி பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு 10, 12-ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகளையும், சேவாலயா பணியாளர்களுக்கு தங்க நாணயங்களும், சேவாலயா செயல்பாடுகளில் உறுதுணையாக இருந்த கிராம மக்களுக்கும், முதியோர் இல்லத்தில் சேவை புரியும் முதியோர்களுக்கும் பரிசுகளை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார்.
பின்னர், சேவாலயாவின் அனைத்து செயல்பாடுகளையும் கணினி மயமாக்கும் 'கோ டிஜிட்டல்' திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், சேவாலயாவின் நிர்வாக அறங்காவலர் முரளிதரன், பூந்தமல்லி முன்னாள் எம்எல்ஏ மணிமாறன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் புட்லூர் சந்திரசேகர், பாக்கம் ஊராட்சி செயலாளர் துரை, முன்னாள் மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக சேவாலயா மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சேவாலயா ஆலோசகர் அமர்சந்த் ஜெயின் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT