தமிழ்நாடு

ஜெயலலிதாவை பார்க்க சசிகலாவை கூட மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை: தினகரன் பரபரப்பு பேட்டி

DIN

கடந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதிக்கு பின்னர் ஜெயலலிதாவை பார்க்க சசிகலாவை கூட மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை என்று அதிமுக அணி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் பி.தனபால் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டதன் காரணமாக, 18 பேரும் தங்களது சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை இழந்து விடுவதாக சட்டப் பேரவைச் செயலகம் அறிவித்தது. 

தகுதி நீக்கம் செய்யப்பட்ட தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரும் கர்நாடக மாநிலம் கூர்க்கில் பகுதியில் தங்கியுள்ளனர். அவர்களை டிடிவி தினகரன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். 

பின்னர் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது: அதிமுகவை மீட்கவே நாங்கள் கூர்க்கில் தனது ஆதரவாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பதவியே முக்கியம் என கருதாமல் எங்கள் ஆதரவாளர்கள் கட்சியை மீட்பதற்காகவே போராடி வருகிறார்கள். 

ஓபிஎஸ் உடன் சேர்ந்து ஈபிஎஸ் கூட்டியது அதிமுக அம்மா அணியின் பொதுக்குழு அல்ல. உண்மையான அதிமுக அம்மா அணியின் பொதுக் குழுவை  விரைவில் கூட்டுவேன்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பிய தினகரன் ஜெயலலிதா மரணத்திற்கு பின்பும் சிறு சலனம்கூட இல்லாமல் அரசு தொடர்ந்ததற்கு சசிகலாவே காரணம் என்றார்.

பொதுக்குழு என்ற பெயரில் நடத்திய கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் செல்லாது. ஜெயலலிதா பற்றி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுவது பதவிக்காகவே. பயத்தால் அமைச்சர்கள் மாறி மாறி பேசுகிறார்கள். அவர்கள் பேசுவதில் எது உண்மை. 

*நோய்தொற்று ஏற்படும் என்பதால் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதிக்கு பின்னர் ஜெயலலிதாவை பார்க்க சசிகலாவை கூட மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT