முகப்பு
தமிழ்நாடு

3 முறை, 3 மணி நேரம் இருதயம் செயலிழந்தும் உயிர் பிழைத்த ரஷ்ய சிறுவன் முதல்வருடன் சந்திப்பு

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ரோமனுக்கு 3 முறை இருதய செயலிழப்பு ஏற்பட்டும், தமிழக மருத்துவர்களின் சிகிச்சையால் உயிர் பிழைத்து குணமடைந்துள்ளான்.

Updated On : 5 ஏப்ரல் 2018, 5:35 pm IST
பகிர்:


சென்னை: ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ரோமனுக்கு 3 முறை இருதய செயலிழப்பு ஏற்பட்டும், தமிழக மருத்துவர்களின் சிகிச்சையால் உயிர் பிழைத்து குணமடைந்துள்ளான்.

ரஷ்யாவைச் சேர்ந்த ரோமனுக்கு 3 முறை இருதய செயலிழப்பு ஏற்பட்டது. மேலும் 3 மணி நேரத்துக்கும் மேலாக இருதயம் தனது துடிப்பை நிறுத்திய பொழுதும், எக்மோ சிகிச்சை மூலமாக அக்குழந்தையின் இருதய துடிப்பை மீட்டு, இருதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் அக்குழந்தைக்கு வெற்றிகரமாக மறுவாழ்வு அளிக்கப்பட்டது.

சென்னை ஃபோர்ட்டிஸ் மலர் மருத்துவமனையில் மருத்துவர் கே.ஆர். பாலகிருஷ்ணன், டாக்டர் சுரேஷ்ராவ் மற்றும் டாக்டர் நாகேஸ்வரன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினரால் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, 3 மணி நேரத்துக்கும் மேலாக இருதயம் தனது துடிப்பை நிறுத்திய நிலையிலும் இருதய செயல்பாட்டினை மீட்டு சிறுவனுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்ட நிகழ்வு இதுவரை உலகில் வேறெங்கும் நடைபெறவில்லை.

Advertisement

Advertisement

தமிழ்நாட்டின் சிறப்பான மருத்துவக் கட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசின் உடலுறுப்பு தானம் சார்ந்த நடைமுறைக்கும் இவ்வகை சிறப்பு அறுவை சிகிச்சைகளுக்கும் தொடர்ந்து உறுதுணையாக இருந்து வரும் தமிழக முதல்வர் பழனிசாமியை, தலைமைச் செயலகத்தில் இன்று ரஷ்ய நாட்டு சிறுவன் ரோமன் புய்யான்கின் மற்றும் அவரது தாய் புய்யாக்கின் ஏகடெரினா ஆகியோர் நேரில் சந்தித்து பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments