முகப்பு
தமிழ்நாடு

8 வயது ரஷிய சிறுவனுக்கு இதய மாற்று அறுவை கிசிச்சை: முதல்வரிடம் பெற்றோர் வாழ்த்து

இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட 8 வயது ரஷிய சிறுவனும், பெற்றோரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் வியாழக்கிழமை வாழ்த்துப் பெற்றனர்.

Updated On : 6 ஏப்ரல் 2018, 2:24 am IST
தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்த, ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து மறுவாழ்வு பெற்ற ரஷியாவைச் சேர்ந்த 8 -வயது சிறுவன் ரோமன் 
பகிர்:

இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட 8 வயது ரஷிய சிறுவனும், பெற்றோரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் வியாழக்கிழமை வாழ்த்துப் பெற்றனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
ரஷிய நாட்டைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ரோமன். இவருக்கு 3 முறை இதயத் தசை செயலிழப்பு ஏற்பட்டது. மேலும், 3 மணி நேரத்துக்கு மேலாக இதயத் தசை தனது செயல்பாட்டை நிறுத்தியபோதும், எக்மோ கருவி மூலம் இதயத் துடிப்பை மீண்டும் மீட்டு, இதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் சிறுவனுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ளஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் இந்தச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. 
சிகிச்சை பெற்ற சிறுவன் ரோமனின் பெற்றோர், தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை வியாழக்கிழமை சந்தித்தனர். அவர்கள் தங்களது பாராட்டையும், நன்றியையும் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments