தமிழ்நாடு

கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை நீட்டிப்பு

DIN

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுவதாக வனத்துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர்.
கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த பல நாள்களாக மழை இல்லாததால் இந்த அருவிக்கு நீர்வரத்து குறைந்தது. இதையடுத்து, கடந்த மாதம் அங்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. 
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 
எனவே சுற்றுலாப் பயணிகள் குளிக்க பாதுகாப்பற்ற நிலை உள்ளதால் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகள் அங்கு குளிக்க பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. இதையடுத்து அருவியில் சீரான நீர்வரத்து ஏற்படும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT