தமிழ்நாடு

நிர்மலா தேவி ஆடியோவில் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும்: குஷ்பு பேச்சு! 

பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோவில் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு கருத்து தெரிவித்துளார்.

DIN

சென்னை: பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோவில் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு கருத்து தெரிவித்துளார்.

கல்லூரி மாணவிகளிடம் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில் பேசியதாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி (46) திங்கள் மாலை கைது செய்யப்பட்டார். உடனடியாக இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்த, மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோவில் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு கருத்து தெரிவித்துளார்.

இந்த விவகாரத்தைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் மகளிரணி சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் செவ்வாய் காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு குஷ்பு பேசியதாவது:

ஒவ்வொரு விஷயத்திலும் நாம் கேள்வி கேட்க வேண்டும். அதிமுக அரசு நாற்காலியைக் காப்பாற்றுவதிலேயே குறிக்கோளாக இருக்கிறது. பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோவில் குறிப்பிடும் உயர்மட்ட அதிகாரிகள் யார், பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதைக் கண்டறிய வேண்டும். அவர்களின் புகைப்படங்களை அதிமுக அரசு வெளியிட வேண்டும். உண்மை வெளியே வர வேண்டும். தவறு செய்தவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சட்டங்களை கடுமையாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னலொளி பெண்ணழகே... கிகி விஜய்!

ரூ.335 கோடி கடனை குறைத்து கொண்ட பிசி ஜுவல்லர்ஸ்!

என்றும் இயல்பாக... பார்வதி!

3-வது அதிவேக சதம் விளாசிய ஹாரி ப்ரூக்; வெற்றியை நோக்கி இங்கிலாந்து!

புளிய மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் பலி, ஓட்டுநர் படுகாயம்

SCROLL FOR NEXT