முகப்பு
தமிழ்நாடு

சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக அமரேஷ் பூஜாரி நியமனம்

சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக அமரேஷ் பூஜாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 19 ஏப்ரல் 2018, 1:38 am IST
பகிர்:

சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக அமரேஷ் பூஜாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஐந்து ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)
அமரேஷ் பூஜாரி---சிபிசிஐடி கூடுதல் டிஜிபி (கூடுதல் டிஜிபி குற்றப் பிரிவு)
கே.ஜெயந்த் முரளி---விழிப்புப்பணி மற்றும் ஊழல் தடுப்புத் துறை இயக்குநர் (சிபிசிஐடி கூடுதல் டிஜிபி)
எம்.என்.மஞ்சுநாதா---தொழில்நுட்பச் சேவைகள் பிரிவு கூடுதல் டிஜிபி (விழிப்புப் பணி மற்றும் ஊழல் தடுப்புத் துறை இயக்குநர்)
ஆபாஷ்குமார்---குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபி (தொழில்நுட்பச் சேவைகள் பிரிவு கூடுதல் டிஜிபி)
பி.விஜயகுமாரி---காவல் துறை துணைத் தலைவராக பதவி உயர்வு-சென்னை பெருநகர காவல் மேற்கு மண்டல இணை ஆணையாளர் (சென்னை பெருநகர காவல் நவீனமயமாக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையின் துணை ஆணையாளர்).
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.