திருத்தணி, வேலூரில் 103 டிகிரி வெயில்
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், திருத்தணி, வேலூரில் புதன்கிழமை 103 டிகிரி வெயில் பதிவானது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், திருத்தணி, வேலூரில் புதன்கிழமை 103 டிகிரி வெயில் பதிவானது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: லட்சத் தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்தது. இந்த நிலையில், வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
திருத்தணியில் 103 டிகிரி: இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக திருத்தணி, வேலூரில் 103 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. சேலம், திருச்சி ஆகிய இடங்களில் 102 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.