தமிழ்நாடு

இந்த ஆண்டின் அதிக வெப்பமான முதல் நாள் இன்று.. குறிப்பாக சென்னைக்கு

DIN


சென்னை: இந்த ஆண்டின் அதிக வெப்பமான முதல் நாளாக இன்று அமையலாம். குறிப்பாக சென்னையில் இன்று 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

தொடர்ந்து மழை பற்றிய தகவல்களை அளித்து தமிழக மக்களுக்கு பெரிதும் உதவி வரும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப், இன்றைய வெப்ப நிலவரம் குறித்து இன்று தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அதில், இந்த ஆண்டில், சென்னையில் அதிக வெப்பமான நாளாக இது பதிவாகும் என்று கூறியுள்ளார். இந்த ஆண்டில் முதல் முறையாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் இன்று பதிவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை நகரின் வெப்பநிலை இன்று நண்பகலில் 36 டிகிரி செல்சியஸ் அளவை தாண்டும் என்று எதிர்பார்ப்பதால், இது இந்த ஆண்டின் அதிக வெப்பமான முதல் நாளாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இனி வரும் நாட்களில் வெப்ப நிலை 35 முதல் 36.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும். இதை மிக அதிக வெப்பம் என்று கூற முடியாது. மனிதர்களால் தாங்கிக் கொள்ளக் கூடிய வெப்பநிலையாகவே இருக்கும். இந்தியாவின் இதர பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் நிலவுகிறது. அதோடு ஒப்பிட்டால் இதனை தாங்கிக் கொள்ள முடியும் என்றே தோன்றுகிறது.

வரும் நாட்களில் வேலூர் - திருத்தணி பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயரும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கோட்’ இரண்டாவது பாடல் அப்டேட்!

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு!

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

SCROLL FOR NEXT