தமிழ்நாடு

குன்னூரில் நாய்கள் கண்காட்சி

தினமணி

நீலகிரி மாவட்டம், குன்னூரில் கோடை சீசனையொட்டி நாய்கள் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் கோடை சீசன் மற்றும் இரண்டாவது சீசன் காலங்களில் நாய்கள் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். நீலகிரி கென்னல் கிளப் சார்பில் நாய்கள் கண்காட்சி குன்னூர் பிராவிடன்ஸ் கல்லுôரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 இதில் ராணுவம், ரயில்வே, காவல் துறைகளில் குற்றங்களைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் ஜெர்மன் ஷெப்பர்டு இன நாய்கள் கலந்து கொண்டன.
 கண்காட்சியில் டாகோ ஆர்ஜென்டீனா, டாகோடிகா சயின்பெரான்டா, பாஸ்மிஅவ் கிரேட்டேன், ஜிஞ்சர் பிரென்ச்மேஸ்டிப், லாசாஅப்சோ, டேஷ்னட், கோல்டன் ரிட்ரிவர் உள்பட பல்வேறு இன நாய்கள் கண்காட்சியில் இடம் பெற்றன. இவை கட்டளைகளுக்குக் கீழ்படிதல், மோப்பத் திறன் உள்பட பல்வேறு சாகசங்களை செய்து காண்பித்தன. இதைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 கண்காட்சியின் நடுவர்களாக மும்பையைச் சேர்ந்த அஞ்சலி, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜெர்மன் ஆகியோர் பங்கேற்றனர்.
 ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் உள்ளூர் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT