தமிழ்நாடு

குமரியில் கடல் சீற்றம் தணிந்து இயல்பு நிலை திரும்பியது: விவேகானந்தர் பாறைக்கு படகுகள் இயக்கம்

DIN

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் மூன்று நாள்களாக நிலவி வந்த கடல் சீற்றம் செவ்வாய்க்கிழமை முற்றிலும் தணிந்து இயல்பு நிலைக்கு திரும்பியதால், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகுகள் இயக்கப்பட்டன.
தென்தமிழகத்தின் இரு நாள்கள் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கடற்கரை பகுதிகளுக்குச் செல்லவதைத் தவிர்க்க வேண்டுமெனவும், மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரித்திருந்தது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியது. கடந்த 21ஆம் தேதியில் இருந்து 23-ஆம் தேதிவரை மூன்று நாள்கள் பெரும்பாலான மீனவர்கள் தொழிலுக்குச் செல்லவில்லை.
4,200 பயணிகள் பார்வை: கன்னியாகுமரியில் அதிகாரிகள் முகாமிட்டு கடல் சீற்றத்தை கண்காணித்து வந்தனர். முக்கடல் சங்கமத்தில் சுற்றுலாப் பயணிகள் நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சீற்றம் தணிந்து கடல் இயல்பாக காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, காலை 8 முதல் மாலை 4 மணி வரை படகுகள் இயக்கப்பட்டன. நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்குச் சென்றனர். செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் மட்டும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 4,200 சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: இதனிடையே, திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள கடல்பகுதியில் வழக்கத்தைவிட அலைகளின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால், அங்கு நாள் முழுவதும் படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். மேலும், காலை 8 மணி தொடங்கி 5 மணிவரை வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் அதிகமான பயணிகள் தங்கும் விடுதிகளின் அறைகளில் முடங்கினர். மாலை 6 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் குறைந்ததால் முக்கடல் சங்கமம், கடற்கரைச் சாலை, சூரிய அஸ்தமனப் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

ஆவேஷம் திரைப்படம் பார்த்து அழுதேன்: இயக்குநர் ஜியோ பேபி

ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT